» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்!
புதன் 7, அக்டோபர் 2020 10:23:27 AM (IST)

எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் 2021 சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதனை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் புலிவேஷம் கட்டி ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மாறி மாறி அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். காலையில் தொடங்கி இரவு வரையும் ஆலோசனை நடைபெற்றது. விடிய விடிய நடந்த ஆலோசனை அதிகாலையில் முடிவுக்கு வந்தது. அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியான நிலையில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக வெற்றி பெறப்போகிறது: நடிகை குஷ்பு பேச்சு
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:40:06 PM (IST)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 1, ஜனவரி 2021 12:08:48 PM (IST)

புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை: பிரதமர் அதிருப்தி
சனி 26, டிசம்பர் 2020 4:54:36 PM (IST)

மக்களை பாதிக்கும் சிலிண்டர் விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 16, டிசம்பர் 2020 11:47:40 AM (IST)

7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் உத்தரவு
சனி 21, நவம்பர் 2020 3:17:13 PM (IST)

தமிழ் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஞாயிறு 15, நவம்பர் 2020 9:59:30 AM (IST)

MAKKALOct 7, 2020 - 03:49:35 PM | Posted IP 162.1*****