» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

இந்திய தேர்தல் நடைமுறைகளில் ஃபேஸ்புக் தலையீடு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்!

திங்கள் 17, ஆகஸ்ட் 2020 5:13:22 PM (IST)

இந்திய தேர்தல் நடைமுறைகளில் ஃபேஸ்புக் தலையீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு கமிட்டி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து பிரசுரிக்கப்படும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை. தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நடந்து கொள்வதாக கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள், கருத்துக்கள் ஆகியவற்றை தனது நிறுவனத்தின் வழிகாட்டு நெறிகளுக்கு எதிராக பேஸ்புக் பதிவுகளில் இருந்து அகற்ற மறுப்பதாகவும் அந்தக் கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை ஃபேஸ்புக் இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. தங்களுக்கு ஆதரவாக பொய்யான செய்திகளை பரப்பும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்களை வெளிவிடவும், வாக்காளர்களைத் தங்களுக்கு சாதகமாக திசை திருப்பவும் பயன்படுத்தி வருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஒருவரின் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை ஃபேஸ்புக் பதிவுகளில் இருந்து நீக்க ஃபேஸ்புக்கின் நிர்வாகி அங்கி தாஸ் மறுப்பதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு ராகுல் காந்தி செய்தி வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், "தனது கட்சியைக்க் கூட தான் சொல்வதைக் கேட்கச் செய்ய முடியாத ராகுல் காந்தி. இந்த உலகத்தையே பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அது தோல்வி அடைந்தவர்களின் பயத்தைப் பார்த்தேன் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் பதில் கூறியிருந்தார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை அடிப்படையில் செய்தியாளர்கள் கூட்டமொன்றில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் மற்றும் கட்சியின் புள்ளிவிவர ஆய்வாளர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இந்தியத் தேர்தல்களில் ஃபேஸ்புக் தலையிடுவதை வால் ஸ்ட்ரீட் சேனல் கட்டுரை உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டனர்.

ஃபேஸ்புக் மீதான புகார்கள் குறித்து இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இரண்டாவதாக ஃபேஸ்புக் தலைமை அலுவலகம் தன்னுடைய நிர்வாகிகளின் நடைமுறை குறித்து விசாரணையும் நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.இந்த கோரிக்கைகளை பாரதிய ஜனதா கட்சியின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா நிராகரித்தார். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் 700 பேச்சுக்களை ஃபேஸ்புக் நிறுவனம் பதிவிலிருந்து அகற்றியுள்ளது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory