» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

நூறு நாட்கள் கடந்து விட்டது: கரோனாவை வெல்வது எப்போது? பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி

செவ்வாய் 7, ஜூலை 2020 5:54:03 PM (IST)

"21 நாட்களில் கரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன்?" என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான கட்டுரையில் "மகாபாரத குருஷேத்திரப் போரைவிட கரோனாவுக்கு எதிரான போர் கடுமையாக இருந்து வருகிறது. கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அதாவது 2021-ம் ஆண்டு வரை நாம் இந்த வைரஸுடன் போரிட வேண்டும்.

உலக அளவில் நிதிச்சூழலில் சூப்பர் பவராக மாறுவோம் என்று மத்திய அரசு கனவு கண்டது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டது துரதிர்ஷ்டம், கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது. உலக அளவில் கரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தி 3-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இப்படியே தொடர்ந்து கரோனா நோயாளிகள் அதிகரித்தால், துரதிர்ஷ்டமான முதலிடத்துக்கு வந்துவிடும்.

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடந்தது. ஆனால், பிரதமர் மோடி, கரோனாவுக்கு எதிரான போரில் நாம் 21 நாட்களில் வென்றுவிடுவோம் என்று மார்ச் மாதம் தெரிவித்தார். ஆனால், தற்போது 100 நாட்களைக் கடந்தும், இன்னும் கரோனா வைரஸ் இருக்கிறது. கரோனாவுக்கு எதிரான போர் தொடரந்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைவரும் சோர்வடைந்து வருகிறார்கள்.

மராட்டியத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக குணமடைந்து வருகிறார்கள் என்றாலும், சில பகுதிகளில் பாதிப்பு இன்னும் குறையவில்லை. குறிப்பாக தானே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறையவில்லை. கரோனா வைரஸால் போலீஸார், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு நிர்வாகத்தில் இருப்போர் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படுவது தேசத்துக்கும், மாநிலங்களுக்கும் உகந்தது அல்ல.

கரோனா வைரஸ் எதிர்காலத்தில் இருக்கும், நாம் வாழ்ந்துதான் தீர வேண்டும். 2021-ம் ஆண்டுக்கு முன்பாக கரோனா தடுப்பு மருந்து கிடைக்கப்போவதில்லை. இதன் அர்த்தம், நாம் அதுவரை கரோனா வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும். எத்தனை நாட்களுக்குத்தான் நாட்டை லாக்டவுனில் வைத்திருக்கப் போகிறீர்கள். இன்னும் எத்தனை நாட்கள் தொடரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் இன்னும் கரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

saamyJul 9, 2020 - 09:52:22 AM | Posted IP 108.1*****

what are you doing man?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Anbu Communications

Black Forest Cakes






Thoothukudi Business Directory