» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு 66வது பிறந்தநாள் – பிரதமர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய் 12, மே 2020 12:02:27 PM (IST)

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள். இதையொட்டி பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  "இன்று பிறந்தநாள் நாள் காணும், முதல்வர் அன்பு அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.

விஜயகாந்த் வாழ்த்து

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக பகிர்ந்துள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து விபரம்: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமோடு, புகழோடு, மகிழ்வோடு வாழ்க... வாழ்க... பல்லாண்டு வாழ்க. உங்களின் நல்லாட்சி தொடர்ந்து நடக்க வேண்டும்” இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory