» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பொதுமக்கள் ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் - முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

வெள்ளி 3, ஏப்ரல் 2020 4:47:55 PM (IST)

பொதுமக்கள் ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் வெளி மாநிலத்தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது;- வெளி மாநில தொழிலாளர்களுக்குத் தேவையான வசதி செய்து தரப்பட்டுள்ளது. கரோனாவின் தாக்கத்தை பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர். கரோனா பரவாமல் தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பை அரசுக்குக் கொடுக்க வேண்டும். மக்களைத் துன்புறுத்த 144 தடை உத்தரவு போடவில்லை. 

மக்களைப் பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவைப் பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டல் சட்டம் தன் கடைமையை செய்யும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதற்குத் தடை இல்லை. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைகளை செய்து கொடுப்பது அரசின் கடமை, ஆனால் மக்களின் பாதுகாப்பு முக்கியம். தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கும் போதே நிவாரணத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதி வரை வாங்கிக்கொள்ளலாம்” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory