» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து!!

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 4:58:54 PM (IST)

வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் புறக்கணிப்பார்கள்  என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 

டெல்லி பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். 

அதில், டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று டெல்லியில் ஆட்சியமைக்க உள்ள ஆம்ஆத்மி கட்சிக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வெறுப்புணர்வுப் பேச்சு, பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இதன்மூலம் அறிந்திருப்பார்கள். பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தேர்தல் சிறந்த பாடமாகும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications





Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory