» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்கள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருதா? ஸ்டாலின் காட்டம்

திங்கள் 27, ஜனவரி 2020 5:35:50 PM (IST)

மக்களுக்கு எதிரான திட்டங்களை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருது வழங்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். இன்றைய இளைஞர்கள் தவறுகளை தட்டிக்கேட்கும் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.  எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு தலைவணங்கும் தமிழக அரசு போல மணமக்கள் மவுனமாக இருக்கக்கூடாது. மனம் திறந்து பேச வேண்டும். உண்மைக்கு துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.நாட்டின் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

தலைவர் கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது வணிகர் அமைப்புகளை கலந்து பேசிய பிறகுதான் பட்ஜெட் தயாரிப்பார். இன்று அந்த நிலை இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக நாம் எதிர்க்கிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றின் மூலம் மக்களை மதம், ஜாதி ரீதியாக பிரிக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது. மத்திய பா.ஜனதா ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள்கூட மக்களை பிரித்தாள நினைக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்.

கேரளா சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.பீகார் மாநில முதல்- மந்திரி இப்போது இந்த சட்டத்தை எதிர்க்கிறார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் மத்திய பா.ஜனதா ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்க்கின்றன. பெரியார் சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர பாடுபட்டார். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க இறுதி மூச்சு உள்ளவரை உழைத்தார்.

ஆனால் தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வர வாக்களித்தது. இப்போது பெரும்பாலான மாநிலங்கள் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை ஆகியவற்றை எதிர்க்கின்றன. ஆனால் தமிழக அ.தி.மு.க. அரசு எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கிறது. மக்கள் நலன்களில் அக்கறை காட்டவில்லை. மத்திய அரசுக்கு அடங்கிப்போகிறது.

மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த அரசுக்கு நல்லாட்சி விருதை மத்திய அரசு கொடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். மக்களுக்கு எதிரானவர்களை தட்டிக்கேட்பதற்காகவே, தி.மு.க. கூட்டணி மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்க்கிறது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தடுக்க போராட்டங்களை நடத்துகிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory