» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

செவ்வாய் 21, ஜனவரி 2020 4:52:13 PM (IST)

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு மக்கள் கருத்தை அறிய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: நிலப் பகுதியிலும், கடலுக்குள்ளும் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஆய்வு செய்தல், உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவை வகைப்பாடு ‘ஏ’ என குறிப்பிடப்பட்டு, அதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிட வேண்டும்என்று கடந்த 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி மத்திய அரசின் அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, கடல் மற்றும் நிலப்பரப்பில் எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி, மேம்பாடு வகைப்பாடு ‘ஏ’ திட்டங்கள் என்றும், ஆய்வு செய்வதை வகைப்பாடு ‘பி-2’ திட்டங்கள் என்றும் பிரித்துள்ளது. இதில், ‘பி-2’ திட்டங்களுக்கு மக்களின்கருத்துகளை அறியத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. தமிழக நெல்விளைச்சலின் தாய்ப் பகுதியாகவும்,சூழலியல் சார்ந்த பகுதியாகவும் உள்ள காவிரி டெல்டா பகுதிகளில்தான் அதிக அளவில் எண்ணெய், இயற்கை எரிவாயு திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. எனவே, விவசாயிகள் இத்திட்டங்களை எதிர்க்கின்றனர். திட்டங்களை செயல்படுத்தும் முன், சம்பந்தப்பட்ட மக்களையும், மாநில அரசையும் ஆலோசிப்பது அவசியம். அப்போதுதான் மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் உறுதி செய்யப்படும். எனவே, தமிழகத்தின் தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்களில் மக்கள் கருத்தை அறியும் வகையில் முந்தைய அறிவிக்கையை செயல்படுத்த வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்டா மக்களின் ஒப்புதல் இன்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் தமிழக விவசாயிகளின் நலன் காக்க, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார், சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் சுற்றுச்சூழல் துறை அறிக்கை குறித்து தமிழக அரசின் கருத்துகளை கேட்டறியவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory