» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் குயின் தொடரை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சனி 14, டிசம்பர் 2019 8:42:23 AM (IST)

உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ள நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை தொடரை சித்தரிக்கும் குயின் இணையதள தொடர் வெளியிடுவது வாக்காளரை திசைத்திருப்பும் என் அதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 27,30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்துள்ளார். அவரது பொதுநல வழக்கு கோரிக்கை மனுவில், " மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் என்ற இணையதள தொடர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. தற்போது தேர்தல் நியாமாகவும், வெளிப்படை தன்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த குயின் இணையதள தொடரிற்கு தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 9-ம் தேதி கோரிக்கை மனு அளித்திருக்கிறேன்.அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து குயின் இணையதள தொடர் வெளியிட தடைவிதிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்”. என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory