» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!

புதன் 11, டிசம்பர் 2019 5:25:43 PM (IST)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துப்பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் முதல்முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேட்பு மனுவுடன் சொத்து மற்றும் வழக்கு விவரங்களை தெரிவிக்கும் 3- ஏ என்ற உறுதிமொழி படிவமும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை விவரங்களை உள்ளிட்டவைகளை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* தனது பெயர்களிலும், குடும்பத்தினர் பெயர்களிலும் இருக்கும் சொத்துக்கள்.

* விவசாய நிலங்கள்.

* இதர சொத்துக்கள்.

* வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்கள்.

* முதலீடுகள்.

* பண இருப்பு

உள்ளிட்டவைகளை வேட்பாளர்கள் முழுமையாக, கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அடிப்படியில் தேர்தல் நடக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டுமின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரும் சொத்து விவர பட்டியலை நோட்டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியானோர் முன்னிலையில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பத்திரங்களை வேட்புமனுவுடம் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Thalir ProductsNalam PasumaiyagamThoothukudi Business Directory