» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வியாழன் 5, டிசம்பர் 2019 3:48:00 PM (IST)

"பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால்  கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்" என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நேற்று இரவு 8 மணியளவில் நான் சிறையில் இருந்து  வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்தபோது, எனது முதல் எண்ணமும் பிரார்த்தனையும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 75 லட்சம் மக்களுக்காக இருந்தது.  2019 ஆகஸ்ட் 4 முதல் அவர்களுக்கு அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் குறித்து நான்  கவலைப்படுகிறேன். சுதந்திரம் பிரிக்க முடியாதது, நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், அவர்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டும். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி  ஆகிய மோசமான முடிவுகளால்  நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ளது . பிரதமர், பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக மவுனம் காத்து வருகிறார். அவர் அதை தனது அமைச்சர்களிடம் விட்டுவிட்டார். பொருளாதார நிபுணர் கூறியது போல், அரசாங்கம் பொருளாதாரத்தின் ‘திறமையற்ற மேலாளராக’ மாறிவிட்டது.

பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள இந்த அரசால் முடியாது, நிதியமைச்சரின் பேச்சு இந்த அரசின் மன நிலையை வெளிப்படுத்துகிறது. வளர்ச்சி 5 சதவீதத்தை தொட்டால்  இந்த ஆண்டை முடித்த நாம் அதிர்ஷ்டசாலிகள். டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனின் எச்சரிக்கையை நினைவில் கொள்ளுங்கள், இந்த அரசாங்கத்தின் கீழ்  வளர்ச்சி உண்மையில் 5 சதவீதம் அல்ல, சுமார் 1. 5 சதவீதம்  தான் உள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அழுத்தம் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் 8ல் இருந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக அரசு பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத அரசாக உள்ளது. 

பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது நிதி அமைச்சராக எனது செயல்களில் எந்தக் குற்றமும் இல்லை, வழி தெரியாததால் அரசு தவறான நடவடிக்கை எடுத்துள்ளது.அமைச்சராக எனது பதிவும் எனது மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக உள்ளன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய வணிக நபர்கள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதை நன்கு அறிவார்கள் என்று கூறினார்.


மக்கள் கருத்து

saamiDec 6, 2019 - 07:33:20 PM | Posted IP 173.2*****

he is the number one culprit

டீஸ் குமார்Dec 5, 2019 - 06:00:30 PM | Posted IP 162.1*****

யோக்கியன் சொல்லிட்டாரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory