» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு

புதன் 4, டிசம்பர் 2019 5:04:23 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த புதிய மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக நாளை விசாரிக்க உள்ளது. அத்துடன் 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications





Thoothukudi Business Directory