» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காற்றுதான் காரணம் : பொன்னையன் பேட்டி

சனி 5, அக்டோபர் 2019 4:56:40 PM (IST)

பேனர் விபத்தால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், காற்றின் மீதுதான் வழக்கு தொடுக்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொன்னையன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர், இந்தியப் பிரதமர் - சீன அதிபர் சந்திப்புக்காக பேனர்கள் வைக்க தமிழக அரசு முனைவதற்கு விளம்பர மோகமே காரணம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பொன்னையன், "இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கு என்ன வயிற்றெரிச்சல்? இந்தியப் பிரதமர் - சீன அதிபர் இருவரும் இரு நாட்டு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார். ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகமும் தெரியவில்லை, அரசியல் ஞானமும் இல்லை. பேனர் கலாச்சாரம் ஏற்கெனவே இருக்கிறது. கருணாநிதியும் அதனைக் கடைபிடித்தார். ஸ்டாலினும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்," எனத் தெரிவித்தார்.

அப்போது, சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு பேனர்கள் வைப்பது, மக்கள் மத்தியில் அதிமுக மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தாதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஸ்டாலின் பொய் சொல்கிறார், பெரிதுபடுத்துகிறார் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். அப்பெண் வண்டியில் செல்லும் போது, காற்று வீசியதால் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டுக் கொன்றார்? இல்லை. இந்தப் பிரச்சினையில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்," என பொன்னையன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

SRI BABY DHARSHITHOct 14, 2019 - 05:13:58 PM | Posted IP 162.1*****

இவன் பொன்னையன் இல்லை பா... இவன் ஒரு பொட்டபையன் ... ஏன்டா டாய் நீங்களும் சோறு திங்குறீங்களா இல்ல ... மனித கழிவுகளை திங்குறீங்களா டா பைத்தியக்கார பசங்கள... கொஞ்சமாவது மண்டைல கலி மண்ணு இருக்க ட .... லூசு பக்கிகளா...

ராமநாதபூபதிOct 7, 2019 - 10:01:39 AM | Posted IP 162.1*****

இவர்தான் அப்போல்லோவில் இட்லி வியாபாரம் பார்த்தவர். சின்னம்மாவை தூக்கி பிடித்து பின்பு கீழ போட்டு மிதித்தவர். எடுபிடி அரசை வெந்நீருடன் சேர்ந்து ஊழல் அரசு என்றவர். பின்பு ஒன்று சேர்ந்த பின்பு இது மக்களின் அரசு என்றவர். எனவே இது போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சை பொருட்படுத்தவேண்டாம்

இவன்Oct 5, 2019 - 05:32:17 PM | Posted IP 162.1*****

கிறுக்கு பய எல்லாம் அதிமுக வில் உள்ளனர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications

Thoothukudi Business Directory