» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 24ம் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்!!
ஞாயிறு 22, செப்டம்பர் 2019 9:27:18 AM (IST)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்றும், வேட்பாளர் நேர்காணல் 24-ந் தேதி நடக்கிறது என்றும் க.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

இந்தநிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை(விருப்பமனு) கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் படிவம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 23-ந் தேதி(நாளை) திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகும். வேட்பாளர் நேர்காணல் 24-ந் தேதி காலை 10 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!
புதன் 11, டிசம்பர் 2019 5:25:43 PM (IST)

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி : ஆட்சியை தக்கவைத்தார் எடியூரப்பா
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:59:11 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை : கமல்ஹாசன் அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 10:22:44 AM (IST)

உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சனி 7, டிசம்பர் 2019 11:08:51 AM (IST)

பாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வியாழன் 5, டிசம்பர் 2019 3:48:00 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு
புதன் 4, டிசம்பர் 2019 5:04:23 PM (IST)
