» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

இந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 5:03:39 PM (IST)

இந்திய பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜுவ்குமார் தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரம் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், இதனை சரிசெய்ய சாதாரன நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது எனவும் ராஜுவ்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 70 ஆண்டுகளில் இது போன்ற நிதி நெருக்கடியை இந்தியா சந்தித்தது இல்லை என்றும், ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி நெருக்கடி ஏற்பட யாரும் யாரையும் நம்பும் நிலையில் இல்லை என்று தெரிவித்திருக்கும் அவர் தனியார் துறையினருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களையும், பிரச்சனைகளையும் தீர்க்க மத்திய அரசு ஏதேனும் செய்தாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

ஆட்டோமொபைல் தொழிலில் வாகனங்கள் விற்பனை குறைவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் தேக்க நிலை போன்றவை பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவின் பல துறைகளில் உற்பத்தி குறைந்து வருகிறது.  அடுத்த ஓராண்டுக்கு பின்னர் இந்த நிலை இன்னும் மோசமடையும் சூழல் இப்போதே உருவாகி கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகும். பல துறைகளில் ஆட்குறைப்பு என்பது, உற்பத்தி, வங்கி நிதி உட்பட எல்லாவற்றையும் பாதிக்க செய்யும். இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நலிவு நிலை, கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

PeterSep 9, 2019 - 03:49:18 PM | Posted IP 173.2*****

பசி கைது போன்ற முட்டாள் தனமான வைகளை விட்டு பொருளாதார முன்னேட்டம் பெற முயற்சியங்கள். பாண்டே போன்றோர் அதை நியாய படுத்துவது விட்டு சட்டு அமைதியாய் இருங்கள்

தமிழன்-Sep 2, 2019 - 06:08:18 PM | Posted IP 108.1*****

இது ஒரு திருட்டு கூட்டம் ..

ஆசீர். விAug 24, 2019 - 04:56:58 PM | Posted IP 162.1*****

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் கலால் வரி ஜி எஸ் டி வரி வருமானத்தில் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பேச்சு மட்டும் நேரு நாட்டை நாசமாக்கினார் நாங்கள் சரி செய்கிறோம் என்று நீளும். அப்படியானால் எவ்வளவோ மேம்பாட்டு இருக்கணுமே. இங்கே ஒன்னும் இல்லையே. இதுதான் உங்கள் நிர்வாக லட்சணம். விளம்பரத்தை வைத்து மட்டுமே ஆட்சியை பிடிப்பது எப்படி என்று உங்களிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்

நிஹாAug 23, 2019 - 06:19:02 PM | Posted IP 173.2*****

பெட்ரோல் டீசல் மானியம் உட்பட பல மானியங்களை நீக்கியது பல மானியங்களை முறைப்படுத்தியது என பல ஆயிரம் கோடி மிச்சமானதே? அது எங்கே போனது? காங்கிரஸ் வாங்கிய கடனை அடைத்தோம் என்று சொல்ல போறீங்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory