» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாஜகவின் இந்தி வெறி போக்கிற்கு எடப்பாடி அரசு துணை போகிறது: வைகோ குற்றச்சாட்டு

வெள்ளி 19, ஜூலை 2019 11:38:03 AM (IST)

தமிழக அரசு பள்ளிகளின் வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு இந்தி புகுத்துவது கண்டனத்திற்குரியது 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணை போய்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கு கடந்த ஜூன் மாதம் முதல் பயோ மெட்ரிக் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பெயர் விபரங்கள் பதிவாகும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. நேற்று வருகைப் பதிவை உறுதி செய்யச் சென்ற ஆசிரியர்களும், பணியாளர்களும் பயோ மெட்ரிக் கருவிகளில் தமிழ் நீக்கப்பட்டு, இந்தி, ஆங்கிலத்தில் பதிவு பெற்ற விபரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தியைப் புகுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? திட்டமிட்டு இந்தி மொழியை வலிந்து திணிக்கின்ற திட்டத்திற்கு தமிழக அரசின் கல்வித்துறை அனுமதி கொடுத்தது கடும் கண்டனத்துக்கு உரியது.

சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முத்திரை முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னையில் இயங்கி வருவது செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனமா? இந்தி மொழி ஆய்வு நிறுவனமா? செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது ஆகும். மத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைப் புகுத்த முனைந்திருக்கிறது. தொடரி துறை, அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தகவல் தொடர்பில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறது. 

இவை எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி வெறிப் போக்கைக் காட்டுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அண்ணா தி.மு.க அரசும் இந்தியைப் புகுத்துவது மன்னிக்க முடியாதது. தமிழக அரசின் புதிய பேருந்துகளில் இந்தி சொற்றொடர்கள், பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் இந்தி என்று தமிழ்நாட்டை இந்தி மயம் ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கின்றேன். தமிழக அரசு உடனடியாக பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளில் இந்தியை நீக்கிவிட்டு, தமிழ் மொழியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

இவன்Jul 20, 2019 - 01:46:56 PM | Posted IP 162.1*****

தெலுங்கு வந்தேறி

BalajiJul 19, 2019 - 12:56:10 PM | Posted IP 108.1*****

இந்த ஆளு கோர்ட் மண்டைல குட்டியும் இன்னும் திருந்தலையா.. எதோ எதோ கற்பனை பண்ணி பேசுறான் பாரு. ஏன்பா DMK நடத்துற ஸ்கூல் தமிழ் பேசின பைன் போடுறாங்களாமே.. நான் காசு தரேன் போய் நாளைக்கு அவங்க ஸ்கூல் முன்னாடி தர்ணா பண்ணுவியா...

சாந்தன்Jul 19, 2019 - 12:48:10 PM | Posted IP 108.1*****

மிகப்பெரிய கண்டுபிடிப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory