» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

புதிய கல்விக் கொள்கை குறித்து பேச்சு: சூர்யாவுக்கு கமல்ஹாசன், பா. ரஞ்சித் ஆதரவு

புதன் 17, ஜூலை 2019 4:58:38 PM (IST)

புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துகளுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். 

எனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது, கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் ஆதரவு

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யாவுக்குத் துணை நிற்போம் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள், 3 வயதிலேயே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும், ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி? என்றும் விமர்சித்தார்.30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை? என்றும் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.

சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

சாந்தன்Jul 21, 2019 - 02:10:25 PM | Posted IP 162.1*****

கமல் ஏற்கெனெவே வீணாப்போனவன் - அவன் உன்னை ஆதரிக்கிறான் - பேஷ்

இவன்Jul 20, 2019 - 01:29:11 PM | Posted IP 162.1*****

பன்றிகள் சாக்கடை கூட்டத்தில் சேருவது போல், கூத்தாடி கூத்தடிகூட சேரும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory