» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி: அதிமுக அரசுக்கு ஆபத்து நீங்குகிறது..?

வெள்ளி 24, மே 2019 10:30:52 AM (IST)

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஒசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. 

வழக்குகளைக் காரணம் தள்ளிவைக்கப்பட்ட 4 தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.   இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ளது.

22 தொகுதி இடைத்தேர்தல் நிலவரங்கள் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை உறுதி செய்திருக்கின்றன. மேலும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெறும் 7 இடங்களில் வெற்றி பெற்றாலே, அதிமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதனால், 2021ம் ஆண்டு வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பேரவையில் அதிமுகவுக்கு இருந்து வந்த பெரும்பான்மை சிக்கல்கள் தீர்ந்துள்ளன.

100-ஐத் தாண்டியது திமுக: 

இடைத் தேர்தலில் 13 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88-லிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது.

பேரவையில் கட்சிகள் பலம்

(தேர்தல் முடிவுக்குப் பிறகு)
மொத்த இடம்    234
அதிமுக    122 
திமுக    101
காங்கிரஸ்    8
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்     1
சுயேச்சை    1
பேரவைத் தலைவர்    1


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory