» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு

வியாழன் 2, மே 2019 5:18:10 PM (IST)

தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் 4 கட்டத்தேர்தல் முடிவடைந்து விட்டது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 18ம் தேதி 38 மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பொதுவாக தேர்தல் வாக்குப்பதிவு நேரமானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5.30 மணியில் இருந்து தொடங்க வேண்டும் என்று, முகமது நிஷாத் பாட்ஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி ஆரோரா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இன்று கோரிக்கை வைத்தார். 

அதில், இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறப்பது காரணமாகவும், தற்போதைய காலக்கட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதாலும் வாக்குப்பதிவின் நேரத்தை மக்களின் நலன்கருதி மாற்றி அமைக்க வேண்டும்’ என்றார்.அதை பரிசீலித்த தலைமை நீதிபதி உத்தரவில், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி அமைக்க கோரி வைக்கப்பட்டுள்ள பொதுநல கோரிக்கை தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக பரிசீலனை செய்து ஒரு உத்தரவையோ அல்லது தங்களது தரப்பு விளக்கத்தையோ நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில், வரும் 19ம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory