» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு

திங்கள் 22, ஏப்ரல் 2019 12:24:19 PM (IST)

"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் வேண்டும்" என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வழக்கறிஞர் சி.ஆர். ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016, அக்டோபர் 24-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. எனவே, 10 நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. 

இதையடுத்து, இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மாநிலத் தேர்தல் ஆணையம், தலைமைச் செயலருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது 4 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சி.ஆர். ஜெய சுகின் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி முறையிட்டார். அப்போது அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.  

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் முன் கடந்த ஜனவரி 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பி. வினோத் கண்ணா கூடுதல் அவகாசம் கோரினார். அதற்கு மனுதாரரும், வழக்கறிஞருமான சி.ஆர். ஜெய்சுகின் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய பதிவாளர், இனி அவகாசம் வழங்கப்படமாட்டாது என்றும், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory