» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஏழைகளுக்கு கொடுப்பவற்றை தடுக்கும் கட்சி. தி.மு.க. : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஞாயிறு 7, ஏப்ரல் 2019 10:10:58 PM (IST)



தி.மு.க. ஏழைகளுக்கு கொடுப்பவற்றை தடுக்கும் கட்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

கரூர் மக்களவை தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேடசந்தூர் பகுதியில் கூட்டத்தினரின் மத்தியில் பேசும்பொழுது, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்பட்ட பொய் அறிக்கை. கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க., மத்தியில் கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு தி.மு.க. எந்த நல்லதும் செய்யவில்லை.

தி.மு.க. ஏழைகளுக்கு கொடுப்பவற்றை தடுக்கும் கட்சி. தி.மு.க. நிர்வாகிகள் ஒழுங்காக இருந்து விட்டால் பெண்கள் பாதுகாப்புடன் இருப்பர். விவசாயிகளுக்காக 23 நாட்கள் நாடாளுமன்றம் முடக்கம் செய்யப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. தேர்தல் வரும்போது தான் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் குறித்து ஞாபகம் வருகிறது. தி.மு.க.வுக்கு வீட்டு மக்களை பற்றியே கவலை என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.


மக்கள் கருத்து

உண்மை தான்Apr 8, 2019 - 12:35:19 PM | Posted IP 141.1*****

மக்களை உயர்த்தாமல் அப்படியே பிச்சைக்காரராக்குவது ஒரு கூட்டம்

ஆப்Apr 8, 2019 - 11:27:10 AM | Posted IP 162.1*****

ஏழைகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு அதை அப்படிய்யே அமுக்குகிற கூட்டம் என்பதை மக்கள் நன்கறிவர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory