» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கேரளா, தமிழ்நாட்டில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா?: சசி தரூர் கேள்வி

ஞாயிறு 7, ஏப்ரல் 2019 10:04:05 PM (IST)

கேரளா, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடிக்கு தைரியம் உள்ளதா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர்  கேள்வி எழுப்பி உள்ளார்.

2019 தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளா - வயநாடு தொகுதியிலும் (2 இடங்களில்) போட்டியிடுகிறார்.அமேதியில் பாரதீய ஜனதா சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ளார். தோல்வி காரணமாகவே அமேதி தொகுதியை விட்டு ராகுல் காந்தி வெளியேறியுள்ளார் என பாரதீய ஜனதா விமர்சனம் செய்கிறது. இந்நிலையில் கேரளா, தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என பாரதீய ஜனதா கூறுவதை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், வயநாடு தொகுதியில் போட்டி தொடர்பாக ராகுல் காந்தி எடுத்த முடிவு அவரால் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தென்னிந்தியாவில் போட்டியிடும் தலைவர் பிரதமராக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது. பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் போட்டியிட தைரியம் உள்ளதா? என கேள்வியை சசி தரூர் எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Anbu Communications

CSC Computer Education



Thoothukudi Business Directory