» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் : காங். வாக்குறுதி

ஞாயிறு 7, ஏப்ரல் 2019 10:00:12 PM (IST)

ஒடிசாவில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.  இந்த அறிக்கையில் இருப்பது பொய் மூட்டைகள் அல்ல. வெற்று வாக்குறுதிகளும் அல்ல. மக்களின் நலத்திட்டங்கள் தான்  என்று கூறப்பட்டுள்ளது. அதில் முக்கிய அம்சங்கள்:

* ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம்.

*அரசுப்பணிகளில் காண்டிராக்ட் ஊழியர்கள் அனைவரும் பணிநிரந்தரம்

* ஆசிரியர்,சுகாதாரம் மற்றும் சமூகப் பணியில் இனி காண்டிராக்ட் முறை ஒழிக்கப்படும்.

*அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

* நிலமற்றவர்களுக்கு நிலம்,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும்.

* பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

* வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை அளிக்கப்படும்.

* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துறையில் வேலை வாய்ப்பு.

* விவசாயிகளுக்கு ரூ.2லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி.

* நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.2600 தரப்படும்.

* விவசாயிகளுக்கு ஆண்டுக்கு  ரூ.10ஆயிரம்வீதம் 3 ஆண்டுகள் சிறப்பு நிதி உதவி.

* 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன் ரூ.1500 வழங்கப்படும்.

* அரசுப்பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு.

*எல்லா மட்டத்திலும் இலவச கல்வி.

* விதவைகளுக்கு மாதாந்திர பென்ஷன் ரூ.2000 அளிக்கப்படும்.

*அ ங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.9000 ஊதியம்.

இவை உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.


மக்கள் கருத்து

ராஜாApr 9, 2019 - 12:54:52 PM | Posted IP 162.1*****

குட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu CommunicationsJoseph Marketing

Black Forest Cakes

New Shape Tailors


CSC Computer Education
Thoothukudi Business Directory