» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நாட்டை ஒருபோதும் நான் தலை குனிய வைக்கவில்லை : பிரதமர் மோடி ஆவேசம்

சனி 6, ஏப்ரல் 2019 12:11:41 PM (IST)‘‘கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நாட்டை ஒருபோதும் நான் தலைகுனிய வைக்கவில்லை. ஆனால், என்னை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோகா மற்றும் சகரன்பூர் ஆகிய நகரங்களில் நேற்று நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: தீவிரவாதிகள் நம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நான் அமைதியாக இருக்க வேண்டுமா அல்லது தாக்குதல் நடத்த வேண்டுமா? என நீங்கள்தான் கூற வேண்டும். தீவிரவாதிகளுக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்கப்படுகிறது. அது இங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு தூக்கம் போகிறது. உலகத்தின் முன் பாகிஸ்தானை தோலுரித்துக் காட்டும்போது, இங்குள்ள சிலர் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர். 

அவர்கள் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய எந்த கட்சியனராகவும் இருக்கட்டும். அவர்கள் உங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை அபாய நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். மாயாவதி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசுகள் தீவிரவாதிகளுக்கு பரிவுகாட்டி அவர்களை விடுவித்தது. கடந்த 5 ஆண்டுகளாக நான் ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவை தலை குனியவைக்கவில்லை. நாட்டின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. எனக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘சையத்’ பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது. 

இது மோடிக்கு வழங்கப்பட்ட விருது அல்ல. இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட விருது. இந்த கவுரவமான விருதை நான் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எதிர்கட்சிகளின் ஒரே கொள்கை என்னை ஆட்சியில் இருந்து அகற்றுவது. வாரிசு அரசியலை வளர்ப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்கு எதிராக காங்கிரஸ் இருக்கிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிராக ராஜீவ் காந்தி இருந்தார். பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை நான் கழுவியபோது, அதை மாயாவதி கேலி செய்கிறார். துப்புரவு தொழிலாளர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியபோது, அவர் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. இவ்வாறு மோடி பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory