» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் இந்தத் தேர்தலோடு திமுக முடிவுக்கு வந்துவிடும்: ராமதாஸ் பேச்சு

வியாழன் 4, ஏப்ரல் 2019 10:11:38 AM (IST)

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலோடு திமுக முடிவுக்கு வந்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

அதிமுக கூட்டணியின் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், இடைத் தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வே.சம்பத்குமார் (அரூர்), ஏ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோரை ஆதரித்து, தருமபுரி மாவட்டம் அரூர், கம்பைநல்லூர், ஜாலிப்புதூர் ஆகிய இடங்களில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மருத்துவர் எஸ்.ராமதாஸ் பேசியது : என்னையும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரிகம் இல்லாமல் தொடர்ந்து பேசி வருகிறார்.

தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 8 தொகுதிகள் வெற்றி பெற்றால், அதிமுக தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நடைபெறும். ஆனால், இடைத் தேர்தலில் 10 தொகுதிகள் கூடுதலாக, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் யாரும் ஒரு வாக்குக் கூட அளிக்கக் கூடாது. தமிழகத்தில் இந்தத் தேர்தலோடு திமுக கட்சி ஒரு முடிவுக்கு வந்து விடும். இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதவியில் இருக்கும் போது, 14 மாநிலங்களில் ஒரே நேரத்தில் கொண்டு வந்தார் என்றார் ராமதாஸ்.


மக்கள் கருத்து

கேட்ச்Apr 4, 2019 - 03:40:37 PM | Posted IP 162.1*****

இவன் இப்படி தான் மாத்தி மாத்தி பல வருசமா சுத்துறான், முதல இவன் கட்சியை காலிபனாதான் மத்ததெல்லாம் முடியும். உன்னைய இந்த தடவ காலி பண்ணுறோம்.

பாலாApr 4, 2019 - 12:21:04 PM | Posted IP 162.1*****

சரியான காமெடி....

சாமிApr 4, 2019 - 10:13:18 AM | Posted IP 172.6*****

மிக சரியாக சொன்னீர்கள் - திமுக தோல்வி அடைவது மட்டும் அல்ல - உடையும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory