» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

புதன் 3, ஏப்ரல் 2019 4:31:41 PM (IST)

கூட்டுறவு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் விவசாயிகளின் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து இன்று (ஏப்ரல் 3) பெருமாநல்லூரியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஈரோட்டில் பிறந்த பெரியார், காஞ்சியில் பிறந்த அண்ணா ஆகியோர் திருப்பூரில் சந்தித்துக்கொண்டதால்தான் தமிழ் சமுதாயம் விடுதலை பெற்றது” என்று தெரிவித்தார்.

துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து பேசிய ஸ்டாலின், "துரைமுருகன் இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது வருமான வரித் துறை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதால் அன்றைய தினம் கதிர் ஆனந்தால் பிறச்சாரத்துக்கு செல்ல முடியவில்லை. அதற்கு ஒருநாள் விட்டு மீண்டும் சோதனை நடத்துகின்றனர்.

சோதனைக்கு வந்த அதிகாரிகளே பணத்தை கொண்டுவந்து வைத்துவிட்டு, துரைமுருகன் மீது பழிபோடுகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. மேலும் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. அத்தோடு குடியாத்தம், ஆம்பூர் இடைத் தேர்தல்களையும் தடுத்து நிறுத்தப் போவதாகவும் தகவல் வருகிறது. இடைத் தேர்தலில் திமுக வெற்றிபெறப் போவது உறுதி” என்று தெரிவித்தார். 

கூட்டுறவு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் சிறிய விவசாயிகள் 5 சவரன் வரையில் வாங்கியுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு பின்னர் அனைத்து தரப்பு விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.


மக்கள் கருத்து

சாமிApr 4, 2019 - 10:10:12 AM | Posted IP 172.6*****

வாயில் வடை

டாடிApr 4, 2019 - 09:41:28 AM | Posted IP 172.6*****

சொல்லி வச்சா கிடக்குது - கண்டிப்பா வெற்றி நமக்கு இல்லை

நாயகம்Apr 3, 2019 - 05:07:24 PM | Posted IP 172.6*****

எப்புடி - பணத்தை கொண்டுவந்து வச்சாங்களா

சாமிApr 3, 2019 - 05:05:49 PM | Posted IP 172.6*****

சபரீசன் எழுதி கொடுத்ததா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory