» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தேர்தலில் பாஜக தலைமையிலான அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: ராகுல் காந்தி

ஞாயிறு 31, மார்ச் 2019 10:00:58 PM (IST)

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்பதை நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். நாட்டின் அடுத்த பிரதமராக நீங்கள் ஆவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி,”இந்த விஷயம் குறித்து பதிலளிப்பது என் அகந்தையின் வெளிப்பாடாக தெரியும். ஆகையால், இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. மக்கள்தான் மாஸ்டர்கள். அவர்களே யார் அடுத்த பிரதமராக வேண்டும் என்று முடிவு எடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

"கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை. மோடி அவர்களின் அகந்தையாலும், அதிகாரப்பசியாலும் தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார். இந்திய மக்களின் அனைவரின் பிரச்சனைகளையும் தன்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்று அவர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார். யாரிடமும் ஆலோசிக்காமலேயே முடிவுகளை எடுத்து வருகிறார். ஆகையாலேயே பல இடங்களில் அவர் தடுமாறுகிறார்” என்று விமர்சித்தார். மக்களவை தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியிடம் என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”வேலைவாய்ப்பின்மை, வேலைவாய்ப்பின்மை, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள், விவசாயிகள், விவசாயிகள், தோல்வியடைந்த பொருளாதாரம், மோடி அவர்களின் தனிப்பட்ட ஊழல்” என்று அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினார்.

”அரசு அமைப்புகள் மீது தாக்குதல், சமூக வன்முறைகள், எஸ்சி/எஸ்டி உரிமைகள் பறிக்கப்படுவது, வாக்குறுதிகளான 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் போடாதது, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தராதது, 80 லட்சம் கோடி கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வருவது உள்ளிட்டவை நிறைவேற்றப்படாததை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். அவர்கள் வரும் தேர்தல் பாஜக தலைமையிலான அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று ராகுல் காந்தி கூறினார்.


மக்கள் கருத்து

தம்பிApr 2, 2019 - 09:41:44 AM | Posted IP 172.6*****

பதினைந்து லட்சம் - உனக்கு இங்கிலீசு சரியா தெரியாது என்று நிரூபணம் ஆகிறது

சாமிApr 1, 2019 - 01:27:00 PM | Posted IP 172.6*****

அட லூசு - அத அப்பறம் பாப்போம்டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory