» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்கள் விரோத கூட்டணியை தகர்க்க அ.ம.மு.க. வேட்பாளர்களே ஆயுதம்: டி.டி.வி.தினகரன் பேச்சு

வியாழன் 28, மார்ச் 2019 12:26:32 PM (IST)

"இந்தியாவில் மக்கள் விரோத கூட்டணியை தகர்க்க அ.ம.மு.க. வேட்பாளர்களே ஆயுதம்” என்று சென்னை தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணனை ஆதரித்து, சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பா.ஜ.க-அ.தி.மு.க. அமைத்துள்ள மக்கள் விரோத கூட்டணிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் தேவை. அந்த கூட்டணியை தகர்க்க மக்களுக்கு கிடைத்திருக்கும் மகத்தான ஆயுதம் தான் நமது கட்சி வேட்பாளர்கள். எனவே அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அந்த வேலையை செய்யுங்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவால் வெற்றி பெற்றவர்கள் இன்றைக்கு டெல்லியை நோக்கி கைகூப்பியபடி படுத்து கிடக்கிறார்கள். இத்தொகுதி எம்.எல்.ஏ. கூட (அமைச்சர் ஜெயக்குமார்), டெபாசிட் கிடைக்காது என்ற பயத்தால் தான் தனது மகனை (ஜெயவர்தன்) இங்கே நிறுத்தாமல் தென்சென்னை தொகுதியிலேயே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்.

எனவே நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டிருக்கும் நீங்கள், வடசென்னை மக்களின் பிரச்சினைகளையும், தேவைகளையும் நன்றாக அறிந்த அ.ம.மு.க. வேட்பாளர் சந்தானகிருஷ்ணனை ஆதரித்து, நமக்கு ஒதுக்கப்படும் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அதனைத்தொடர்ந்து காசிமேடு சிக்னல், திருவொற்றியூர் தேரடி, மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி.தினகரன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory