» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றி இருக்கிறதா? பிரேமலதா கேள்வி

வியாழன் 28, மார்ச் 2019 10:53:12 AM (IST)

தேர்தல் அறிக்கை வெளியிடுவது சம்பிரதாயம் தான், எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றி இருக்கிறதா? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: குறைந்தபட்ச வருவாய் அளிப்பது குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி சொல்லியிருக்கிறார். அந்தந்த கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால் பிரதமராக மீண்டும் மோடி தான் வருவார் என்பதில் மாற்று கருத்து கிடையாது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை உரிமையோடு கேட்டு பெறுவோம்.

தேர்தல் பிரசாரத்தில் ஆரத்தி எடுக்கும்போது பணம் தருவது எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. கனிமொழி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதிகமாக நடப்பதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. ஆரத்திக்கு பணம் தருவது கலாசாரமாக மாறிவிட்டது. தேர்தல் விதிமுறைகள் இருக்கும்போது அதை பின்பற்ற வேண்டும். ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் தருவதை கண்டிக்கிறோம். வலிமைமிக்க பிரதமராக மோடி உள்ளார். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் பிரதமர் யார்? என்று சொல்ல கூட தைரியம் இல்லை. ராகுல் காந்தியா? மோடியா? என்று பார்க்கும்போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தான் இருக்கும்.

திருப்பூரில் தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். தேர்தல் அறிக்கையில் கூறிய எல்லாவற்றையும் யார் தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றியது இல்லை. காங்கிரஸ் கட்சி ஊழல் தான் செய்து உள்ளது.தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்பதால் பிரதமர், கட்சி சரியில்லை என்று கூறமுடியாது. தேர்தல் அறிக்கை ஒரு சம்பிரதாயமாக தான் உள்ளது. அதில் கூறிய வாக்குறுதிகளை எந்த கட்சியாவது நிறைவேற்றி இருக்கிறதா? என்றால் யாரையும் சொல்ல முடியாது. இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory