» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

முரட்டு பக்தரின் சிலைக்கு கனிமொழி மரியாதை

திங்கள் 25, மார்ச் 2019 10:10:33 AM (IST)



தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, கலைஞரின் முரட்டு பக்தன் என்றழைக்கப்படும் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தூத்துக்குடி வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இரு பெரும் தலைவர்களும் பரப்பான தேர்தல் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழிசை, கனிெமொழி ஆகியோர் தங்கள் கட்சியின் சார்பாக இன்று பகல் 12 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் கனிமொழி, கலைஞரின் முரட்டு பக்தன் என்றழைக்கப்படும் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் நிணைவிடத்திற்கு சென்று, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வேட்பு மனு தாக்கலுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன், திமுக சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.ஜெயகுமார், திமுக மாவட்ட செயலாளர் கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications






Thoothukudi Business Directory