» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட பயமில்லை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

வெள்ளி 8, மார்ச் 2019 3:57:51 PM (IST)

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திமுக, அதிமுக என இருதரப்பிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது. தேமுதிக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை. ஓரிரு நாட்களில் தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. சாதாரணமான விவகாரத்தை சூழ்ச்சி மூலமாக திமுக பூதாகரமாக்கிவிட்டது. 


துரைமுருகனை எங்கள் கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர். தேமுதிகவினர் துரைமுருகனை சந்திக்கும் முன் வராத ஊடகங்கள், அவரை சந்தித்த பின்னர், வந்தது எப்படி? துரைமுருகனை எதற்காக வேண்டுமானாலும் சந்தித்திருந்தாலும், இதை வெளியில் சொல்லலாமா? திமுகவை பற்றி சுதீஷிடம் துரைமுருகன் பேசியது குறித்து முதலில் விளக்கம் அளிக்க வேண்டும். தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எது நாகரிகம் என்பதை செய்தியாளர்களும், எதிர்தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். 

விஜயகாந்துடனான சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்று ஸ்டாலின் முதலில் சொல்ல வேண்டும். யார் என்றே தெரியவில்லை என கூறும் துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகளை வீட்டில் அனுமதித்தது எப்படி? மணப்பெண் இருந்தால் பத்து பேர் பெண் கேட்டுதான் வருவார்கள், அதுபோலதான் தேர்தல் நேரத்திலும். தேமுதிகவின் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தேமுதிகவின் நிலை என்ன? யாரோடு கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதை விரைவில் சொல்வோம். கடந்த தேர்தலில் அதிமுகவில் 37 எம்பிக்கள் வெற்றிபெற்றும் தமிழகத்துக்கு என்ன நன்மை கிடைத்தது? 

ஆக்கப் பொறுத்துவிட்டீர்கள், ஆறப் பொறுங்கள். செய்தியாளர்கள் 24 மணி நேரமும் தேமுதிக அலுவலகம் முன் நின்றால் நாங்கள் பதிலளிக்க முடியாது. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வரா என்பதை, தேர்தல் கூட்டணி முடிவான பிறகு பாருங்கள். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு எந்தப் பயமும் இல்லை  என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். 


மக்கள் கருத்து

தலைவர்Mar 12, 2019 - 12:53:29 PM | Posted IP 141.1*****

அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி

தமிழ்ச்செல்வன்Mar 9, 2019 - 10:09:47 AM | Posted IP 162.1*****

உன் கண்ணுல இருக்குற மரண பீதி எனக்கு தெளிவா தெரியுது. என் கிட்டேயும் அது ஹெவியாக இருக்கத்தான் செய்யுது. ஆனா அத வெளிக்காட்டாம அரசியல் பண்ணனும். புரியுதா?

தமிழ்ச்செல்வன்Mar 8, 2019 - 06:17:54 PM | Posted IP 162.1*****

மரண பயம் உன் கண்ணுல நல்லாவே தெரியுது. அத வெளிக்காட்டாம அரசியல் பண்ணனும். புரியுதா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes
Thoothukudi Business Directory