» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சர்கார் திரைப்படத்தின் தாக்கம் எதிரொலி : 49 பி குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு!!

வியாழன் 7, மார்ச் 2019 5:12:24 PM (IST)



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 49 பி பிரிவு குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். அமெரிக்காவில் இருக்கும் விஜய், தேர்தலில் தான் வாக்கைச் செலுத்துவதற்காக இந்தியா வருவார். ஆனால், அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 49 பி பிரிவைப் பயன்படுத்தி, தன் வாக்குரிமையைப் பெறுவார் விஜய்.

பெரும்பாலானவர்களால் அறியப்படாத இந்த சட்டப்பிரிவு, சர்கார் படத்துக்குப் பிறகு பரவலாகத் தெரியவந்தது. நோட்டாவின் சட்டப்பிரிவான 49 ஓ போல, 49 பியும் மக்கள் கவனத்துக்கு வந்தது. இந்நிலையில், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 49 பி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இந்தச் சட்டப்பிரிவு குறித்த சுவரொட்டி மூலம் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ், "மகிழ்ச்சி, தேர்தல் ஆணையம் 49 பி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education



Black Forest Cakes


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory