» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ரஃபேல் ஊழலில் தொடக்கமும், முடிவுமான பிரதமர் மோடிக்கு தண்டனை நிச்சயம் : ராகுல் காந்தி பேட்டி

வியாழன் 7, மார்ச் 2019 3:53:10 PM (IST)

ரஃபேல் ஊழலில் தொடக்கமும், முடிவுமான பிரதமர் மோடிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். 

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் பேசியதாவது: ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த ஆவணங்கள் உண்மைதன்மை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அதேவேளையில் தன் மீது தவறில்லை என்றால் பிரதமரும் அந்த விசாரணையில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இந்த வழக்கில் பிரதமர் மோடி தவறு செய்தது நிரூபிக்கும் வகையிலான உண்மை ஆதாரங்கள் உள்ளன. எனவே அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். ஏனென்றால் இந்த மொத்த ஊழலில் தொடக்கமும், முடிவும் பிரதமர் மோடி தான். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த ஆவணங்களை அழிக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஊழல் மோடி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.  


மக்கள் கருத்து

ஆசீர். விMar 12, 2019 - 12:57:35 PM | Posted IP 162.1*****

2 ஜி வழக்கில் நீங்கள் சொல்லாத பொய்யா. கடைசியில் நீதிபதி உண்மையை தீர்ப்பில் சொல்லிவிட்டார். இப்போ கூட நீங்கள் அப்பீல் செய்துள்ளீர்கள். ஆனால் வழக்கு விசாரணை பட்டியலுக்கு வரவே மாட்டேங்குதே ஏன்? ஆனால் ரபேல் ஊழல் முழுக்க உண்மை. மோடி பேசாமல் ஓடும்போதே தெரியவேண்டாமா ???

சாமிMar 11, 2019 - 02:18:50 PM | Posted IP 172.6*****

திரும்ப திரும்ப பொய் சொல்றானே - இவனுக்கு டெபாசிட்டே கிடைக்க கூடாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer EducationThoothukudi Business Directory