» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாராளுமன்ற மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி : சரத்குமார் அறிவிப்பு

புதன் 6, மார்ச் 2019 8:50:51 PM (IST)

வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுகவுடனான கூட்டணி குறித்து தேமுதிக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தேர்தலில் தனது நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக அக்கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.  பாராளுமன்ற மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பலகட்ட ஆலோசனைக்கூட்டங்கள் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று எங்கள் இயக்கத்தின் முக்கிய முடிவினை தற்போது அறிவிக்கிறேன். எதிர்வரும் மக்களவை தேர்தலில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து, எங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும், நிர்வாகிகள் முன்னிலையிலும் வெளியிடுகிறேன்.

23 வருட காலம் அரசியல் அனுபவமும் 11 வருட காலம் கட்சியை நிறுவி பல்வேறு அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தும், பணிபுரிந்தும் பயணித்த நான் எதிர்காலத்தில் அரசியலின் தரத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டு, இந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற மக்களவை தேர்தலில் எனது இயக்கத்தின் சகோதர சகோதரிகளை தனித்து போட்டியிட பணித்திருக்கிறேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

கேட்ச்Mar 7, 2019 - 04:51:52 PM | Posted IP 141.1*****

தவிர்த்திருக்கலாம், வோட்டு கிடைக்காது பாஸ்.

தமிழ்ச்செல்வன்Mar 6, 2019 - 09:25:37 PM | Posted IP 162.1*****

ஒருத்தனும் கண்டுக்கல. பாவம். எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory