» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களவைத் தேர்தல் தேதிகளை தாமதப்படுத்துவது ஏன்? : அகமது படேல் கேள்வி

திங்கள் 4, மார்ச் 2019 8:49:30 PM (IST)

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, பொதுத் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி தனது அரசு முறை பயண நிகழ்வுகள் அனைத்தையும் நிறைவு செய்யட்டும் என்று தேர்தல் ஆணையம் காத்துக்கொண்டிருக்கிறதா ?. அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்தி அரசியல் கூட்டங்கள், தொலைக்காட்சி/ரேடியோ மற்றும் நாளிதழ்கள் என விளம்பரங்களாக வெளியிடுகின்றனர். அரசு பணத்தில் கடைசி கட்டம் வரை பிரசாரம் செய்யட்டும் என தேர்தல் ஆணையம் அரசுக்கு நேரம் தருவது போல் உள்ளது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications






Thoothukudi Business Directory