» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே, நாளை நமதே: ரஜினி வாழ்த்துக்கு கமல் நன்றி!!

திங்கள் 25, பிப்ரவரி 2019 11:33:02 AM (IST)

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதை ஒட்டி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிக்கு  கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவையொட்டி தமிழகத்தில் நேற்று (பிப்.24) பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கமல்ஹாசன் சிறப்புரை ஆற்றினார்.  ஓராண்டு நிறைவையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது.

தமிழ்த் திரையுலகில் கமலுக்கு நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் ஓராண்டு நிறைவையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல் முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என்று நேற்றிரவு (பிப்.24) ட்வீட் செய்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் "நன்றி ரஜினிகாந்த். என் 40 ஆண்டு கால நண்பரே, நல்லவர் துணை  நின்றால் நாற்பது எளிதே, நாளை நமதே." என்று தெரிவித்துள்ளார். ரஜினியும் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இதற்காக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரையும் சந்தித்துப் பேசி வருகிறார். அரசியலில் தன் நண்பரைப் போட்டியாகக் கருதாமல் ரஜினி வாழ்த்தியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஒருவன்Feb 28, 2019 - 09:57:03 PM | Posted IP 162.1*****

கூத்தாடிகள் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமா போவது உறுதி .. இனி படித்தவர்கள் தான் ஆட்சிக்கு வரணும்

ராமநாதபூபதிFeb 26, 2019 - 11:24:38 AM | Posted IP 162.1*****

தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாத இருவரும் இணைந்தால் தமிழ்நாடு குட்டிசுவராகி விடும்

தமிழன்Oct 2, 1551 - 12:30:00 PM | Posted IP 162.1*****

இரண்டு பேரும் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் பல தொகுதிகளை கைப்பற்றலாம் . இது ஒரு நல்ல சந்தர்ப்பம் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory