» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்

புதன் 13, பிப்ரவரி 2019 7:42:09 PM (IST)

நாடாளுமன்றம் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஆண், பெண் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டிருக்கிறது .

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடர்ந்து செய்து வருகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம்தமிழர் கட்சி வேட்பாளர்பட்டியலை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். 

இதில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பட்டியலில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 

21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், திருவாரூர், ஓட்டப்பிடாரம், ஓசூர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை, குடியாத்தம், திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

சாமிFeb 19, 2019 - 06:35:55 PM | Posted IP 172.6*****

தேசத்துரோகிகள் வெல்லமுடியாது

எவனோFeb 15, 2019 - 03:43:04 PM | Posted IP 180.9*****

சீமான் அந்தாள வந்து கிழிச்சிர போறான் அவனையும் அவன் தும்பிகளையும் வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது

தமிழ்ச்செல்வன்Feb 14, 2019 - 11:28:42 AM | Posted IP 162.1*****

நான் தீவிர தீம்கா ஆதரவாளர்தான். ஆனால் இனி என் குடும்பம் மொத்த ஓட்டும் நாம் தமிழருக்குத்தான்.

சுந்தரன் தெய்வேந்திரன்Feb 14, 2019 - 11:23:55 AM | Posted IP 162.1*****

ஆக. This is கோணவாய் நம்பர் 7 என்ன ஆவாரோ? யாரு? அரச்சமாவாயே அரைக்கும் ஸ்டாலின் முதல்ல ஒழுங்கா பேச சொல்லுங்க.

தமிழ் வீரன்Feb 13, 2019 - 09:42:41 PM | Posted IP 162.1*****

CM மும் பெப்பே. சிஎம் ஆக துடிக்கும் ஸ்டாலினும் பெப்பே. ஆக த‌மி‌ழ் நாடு ஆகும் பெப்பே பே.

சின்ன மணிFeb 13, 2019 - 09:39:44 PM | Posted IP 162.1*****

சீமான் பேச்ச கேட்டா தமிழ் நாடு தமிழர் நாடா இருக்கும். இல்ல அம்போ தா‌ன். DMK ADMK போன்ற கட்சிகள் நாட்டை கூறு போட்டு விற்று விட்டு அடுத்த வியாபாரம் செய்ய தயாராகது.

என் பெயர் தமிழ்Feb 13, 2019 - 08:15:51 PM | Posted IP 162.1*****

ஒகே.. இனி ஆட்சிய காவுக்குறோம்.. நாட்டை பிடிக்கிறோம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory