» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு

வெள்ளி 8, பிப்ரவரி 2019 8:23:12 PM (IST)

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய்த்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போதே நடந்து வருகிறது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய்த்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். 

அதில் தேர்தல் நடைபெறவிருப்பதால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  அதிகாரிகளை மாற்றம் செய்து, பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


CSC Computer Education


Anbu Communications

New Shape Tailors

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory