» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

செவ்வாய் 5, பிப்ரவரி 2019 3:46:06 PM (IST)

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்றாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது  என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஈரோடு முனிசிபல் காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவச்சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்த கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்ததை பெருமையாக கருதுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

அ.தி.மு.க. தனித்து நின்றாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது. டெபாசிட் பறி போய்விடும். மோடி ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடியில் கூட்டம் நடத்தினாலும் சரி மொடக்குறிச்சியில் கூட்டம் நடத்தினாலும் சரி கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறவே முடியாது. அ.தி.மு.க.வும் வெற்றி பெற முடியாது.மம்தா போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. மோடி தனது ஆளுமை அதிகாரம் மூலம் சி.பி.ஐ-யை ஏவி அடக்குமுறை கையாள்கிறார்.மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி நீண்ட நாட்களாக கட்சிக்கு பாடுபட்டு வருகிறார். மூத்த தலைவர். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன். காங்கிரஸ் கட்சி புது எழுச்சியை பெற்றுள்ளது. இவ்வாறு இளங்கோவன் கூறினார். 


மக்கள் கருத்து

சாமிFeb 5, 2019 - 05:33:00 PM | Posted IP 108.1*****

அப்பா இவரு சொல்லிட்டார் - இனிமே கவலையே இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Anbu Communications



Thoothukudi Business Directory