» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர இயலாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

வியாழன் 24, ஜனவரி 2019 3:30:37 PM (IST)

பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் இந்த சர்ச்சையின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சதி திட்டம் இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவிர்த்துவிட்டு பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. 

திமுக, பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து டில்லியில் நடந்த ஒரு விழாவில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,”வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர மாட்டோம். வாக்குப்பதிவுக்கு மின்னணு இயந்திரங்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பழைய வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. அதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும்,”வாக்குப்பதிவு தொடர்பாக புதிய ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம். அதுபற்றி தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். ஆனால் பழைய முறைக்கு செல்ல இயலாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory