» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இத்தனை ஆண்டுகள் செய்யாததையா இனிமேல் செய்ய போகிறீர்கள்? ராகுலை அதிர வைத்த சிறுமி

திங்கள் 14, ஜனவரி 2019 12:26:11 PM (IST)

இந்தியாவில் 80 சதவீத காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் செய்யாத நன்மையையா, இனிமேல் நீங்கள் செய்ய போகிறீர்களா?" என ராகுலிடம் 14 வயது சிறுமி கேள்வி கேட்டு அதிர வைத்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக துபாய் சென்றார். துபாய் நாட்டு தலைவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது பேசிய ராகுல், "இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை, இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இந்த நிலையை மாற்றும்" என கூறினார். அதன்பின் 14 வயது வயது தமிழ் சிறுமி ஒருவர், ராகுலிடம் கேள்வி கேட்க கை தூக்கினார். இதைப் பார்த்த ராகுல் அவரிடம் மைக்கை கொடுக்கும்படி கூறினார். 

அப்போது அந்த சிறுமி பேசுகையில், "இந்தியாவில் மதவாதம் அதிகரித்து விட்டதாக கூறும் நீங்கள், குஜராத் தேர்தலின்போது ஏன் கோயிலுக்கு சென்றீர்கள்?" என கேட்டார். இதற்கு பதிலளித்த ராகுல், "அனைத்து மதத்தினரும் சமம் என்பதை காட்டவே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறேன்" என்றார். சிறுமி கேட்ட மற்றொரு கேள்வி ராகுலை மிரள வைத்து விட்டது. "சுதந்திர இந்தியாவில் 80 சதவீத ஆண்டு காலம் காங்கிரஸ்தான் ஆட்சி செய்தது. அப்போது செய்யாத நன்மையை, நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்களா? மோடி பிரதமரான பின்புதான், வெளிநாடுகளில் வசிக்கும் எங்களை போன்றோருக்கு அங்கீகாரம் கிடைத்தது. 

எனவே, நீங்கள் மதவாதம் பற்றி பேசாமல், ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என கூறுங்கள். அப்போதுதான் இந்திய மக்கள் சிந்திப்பார்கள்" என்றார். துபாயில் உள்ள பாஜ ஆதரவாளர் ஒருவர் தனது மகளிடம் சொல்லிக் கொடுத்து கேள்வி கேட்டதுபோல் இந்த நிகழ்ச்சி இருந்ததால், காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப குழு இந்நிகழ்ச்சியின் நேரலையை நிறுத்திவிட்டது. 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJan 17, 2019 - 10:52:26 AM | Posted IP 162.1*****

இது ஒரு போலி வீடியோ என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டனர். இந்த மானம் கெட்ட சாமி மட்டும் அதை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறான். கேவலம் வெட்கம் அவமானம்

சாமீJan 14, 2019 - 02:12:36 PM | Posted IP 162.1*****

மிகவும் சரியான கேள்வி - பப்பு ஓடிவிட்டான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory