» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திங்கள் 7, ஜனவரி 2019 4:59:06 PM (IST)

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு(பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாகச் செல்லக்கூடாது. இப்போது அதைக்காட்டிலும் அதிகரிக்கும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாக வேண்டியது இருக்கும் என்பதால் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர்சாதி வகுப்பினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கவர மத்திய அரசு திடீர் இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுப்பிரிவினரிடையே வாக்குகளைத் தக்கவைக்கும் நோக்கில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளது அரசு.


மக்கள் கருத்து

தமிழன்-Jan 8, 2019 - 05:56:23 PM | Posted IP 141.1*****

தமிழரில் உயர் சாதி யார் யார் ??

தமிழன்Jan 7, 2019 - 05:28:25 PM | Posted IP 172.6*****

மிகவும் வரவேற்கப்படவேண்டியது....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education


Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory