» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திருவாரூா் இடைத்தோ்தல் : திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு

வெள்ளி 4, ஜனவரி 2019 7:27:02 PM (IST)

திருவாரூா் இடைத்தோ்தலில் தி.மு.க. சாா்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவாா் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூா் தொகுதிக்கு வருகின்ற 28ம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளா் தோ்வு கட்சிகளிடையே சூடுபிடித்துள்ளது. நாம் தமிழா் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளா்களை அறிவித்துள்ளன. 

இந்நிலையில் இன்று தி.மு.க. சாா்பில் போட்டியிட விருப்பம் தொிவித்த நபா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். முன்பு கருணாநிதிக்காக கடுமையாக பிரசாரம் செய்தவா்களில் முதன்மை நபராக பூண்டி கலைவாணன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer EducationBlack Forest CakesNalam Pasumaiyagam

Anbu CommunicationsThoothukudi Business Directory