» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மழைக் காலம் வந்தால் சூரியன் மறையும்; தாமரை மலரும்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

புதன் 5, டிசம்பர் 2018 11:19:51 AM (IST)

மழைக் காலம் வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் புதிதாக கட்டவுள்ள மேக்கேதாட்டு அணைத்திட்டம் தொடர்பாக, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தண்ணீரே இல்லை-தாமரை எப்படி மலரும் என்று பாஜகவைக் குறிப்பிட்டுப் பேசினார்.இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் தனது சுட்டுரையில் பதிலளித்துள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது: இனி மழைக் காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். இது செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவழைத்தாவது குளங்களை நிரம்ப வைப்போம். அதில் தாமரையை மலரச் செய்வோம். காவிப் படையின் ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் பதில்: இதற்கு சுட்டுரை வழியாகவே பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல். தாமரை மலர சூரிய சக்தி தேவை. சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing





Thoothukudi Business Directory