» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்நாட்டு மக்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை: சரத்குமார் குற்றச்சாட்டு

திங்கள் 26, நவம்பர் 2018 9:23:50 AM (IST)

உள்நாட்டு மக்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளேன். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை. நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.

மத்திய ஆய்வுக்குழு இரவு நேரத்தில் எப்படி ஆய்வு செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. பகல் நேரத்தில் சென்று ஆய்வு செய்து அங்கு என்ன நடந்து உள்ளது என அறியவேண்டும். அதிகாரிகள் அங்குதான் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். அவர்களிடமும் கேட்கவேண்டும். மக்களையும் சந்தித்து பேசவேண்டும். உண்மை நிலவரத்தை புரிந்த ஆய்வாக இருக்கவேண்டும். பிரதமர் மோடி, தமிழகம் உள்பட உள்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் போக மாட்டார். அவர் வெளிநாட்டுக்குத்தான் போவார். அதிகாரிகள் எல்லாம் பார்த்து கொள்வார்கள். மக்கள் பற்றி அவருக்கு கவலை கிடையாது.

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரியில்லை என்று முதன் முதலில் கூறினேன். பாரம்பரியத்துடன் ஆகம விதியுடன் உருவாக்கப்பட்ட கோவில். நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இருந்து வருவதால் அதை சீர்குலைக்க கூடாது. அங்கு நடக்கும் போராட்டத்தை பார்க்கும் போது மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அந்த தீர்ப்புக்கு ஆதரவு இல்லை என்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சாம்ய்Nov 27, 2018 - 10:16:46 PM | Posted IP 172.6*****

சேதம் இல்லை என்று எவரும் சொல்லவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsNew Shape Tailors


Joseph MarketingThoothukudi Business Directory