» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கஜா புயல் நிவாரணப் பணிக்கு திமுக சார்பில் ரூ.1கோடி நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திங்கள் 19, நவம்பர் 2018 12:49:30 PM (IST)

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள். 

புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாயும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals


New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingThoothukudi Business Directory