» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

வெள்ளி 16, நவம்பர் 2018 3:44:22 PM (IST)

கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம்  களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிNov 16, 2018 - 03:48:25 PM | Posted IP 172.6*****

ஜெயலலிதா இருந்து இருந்தால் இதுபோன்ற ஒரு முன்னெச்சரிக்கை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest Cakes


Anbu Communications

New Shape Tailors



Thoothukudi Business Directory