» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தகுதி நீக்கம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : தங்க தமிழ் செல்வன்

வெள்ளி 26, அக்டோபர் 2018 2:04:53 PM (IST)

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என  தங்க தமிழ்செல்வன் பேட்டியின் போது கூறினார்.

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏ.,கள் தகுதி நீக்க வழக்கில் எம்எல்ஏ.,கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் இன்று டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவு எம்எல்ஏ.,கள் சந்தித்து பேசினார்கள்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன்,  சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்க உச்சநீதிமன்றம் செல்கிறோம். 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.  நாளையே தேர்தல் வந்தாலும் 18 பேரும் சந்திக்க தயார்.  22 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை செய்யக் கோரி நவ. 10-ம் தேதி முதல் உண்ணாவிரதம், இறுதியாக ஆர்.கே.நகரில் உண்ணாவிரதம் இருப்போம் என அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

CSC Computer Education



New Shape Tailors

Joseph Marketing


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory