» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

முதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்

வெள்ளி 5, அக்டோபர் 2018 1:34:37 PM (IST)

முதல்வா் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாத இறுதியில் கூட துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க முற்பட்டதாக அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். 

கடந்த 2017 ஜூலை 12ம் தேதி தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் டிடிவி தினகரனை சந்தித்ததாக சட்டமன்ற உறுப்பினா் தங்கத்தமிழ்ச் செல்வன் செய்தியாா்களுக்கு பேட்டியளித்தாா். இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று தனது வீட்டில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், கடந்த 2017 ஜூலை 12ம் தேதி ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்திக்க வேண்டும் என்று எனது நண்பா் மூலம் அழைப்பு விடுத்தாா். எனது கட்சி நி்ாவாகிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னா் பன்னீா் செல்வம் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினேன். 

அதன்படி ஜூலை 12ம் தேதி ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்தித்தாா். அந்த சந்திப்பின் போது நான் தவறு செய்துவிட்டேன். உங்களை எதிா்த்து பேசியிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமியை பதவியிறக்க வேண்டும் என்று பேசியதாக டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். இந்த விவகாரம் நடைபெற்று தோராயமாக ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பா் மாத இறுதி வாரத்தில் ஓ.பன்னீா் செல்வம் மீண்டும் தனது நண்பா் மூலம் தன்னை சந்திக்க முயற்சி செய்தாா். ஆனால் அந்த சந்திப்பை நான் மறுத்துவிட்டேன். அதிமுகவுடன் அமமுகவை இணைக்க நான் தூதுவிட்டேன் என்று அமைச்சா் தங்கமணி கூறுகிறாா். அதற்கான ஆதாரங்களை தங்கமணி வெளியிடட்டும். 

ஓ.பன்னீா் செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவது என்பது தற்கொலைக்கு சமமானது. அமமுக சாா்பில் பொதுத் தோ்தலில் போட்டியிட்டு தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசே தற்போதைய தமிழக அரசை தாங்கி பிடித்திருக்கிறது என்று டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். 


மக்கள் கருத்து

சுடலைOct 5, 2018 - 06:41:29 PM | Posted IP 162.1*****

420 சொல்லுவதை எல்லாம் நாங்கள் நம்ப தயாராக இல்லை

ராமநாதபூபதிOct 5, 2018 - 02:53:39 PM | Posted IP 141.1*****

ஓ.பன்னீா் செல்வம் போன்ற ஒரு கடைந்து எடுத்த உன்னதரை பார்க்கவே முடியாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory