» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இந்தியாவின் தளபதி ஒரு திருடன் என்பது வருத்தமான உண்மை: ராகுல் கருத்தால் சர்ச்சை!!

திங்கள் 24, செப்டம்பர் 2018 5:54:07 PM (IST)

இந்தியாவின் தளபதி ஒரு திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், கூறி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார். 

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. 

சமீபத்தில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை அனில் அம்பானியின் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பணிகளை மேற்கொள்ள சொன்னது. வேறு எந்த நிறுவனம் குறித்தும் எங்களுக்கு சிபாரிசு செய்யப்படவில்லை. இந்திய அரசு தான் அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்சுடன் ஒப்பந்தம் செய்ய சொன்னது எனக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார். பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே கூறிய வீடியோவை பகிர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்தியாவின் தளபதி ஒரு திருடன்  என்பது வருத்தமான உண்மை" என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.


மக்கள் கருத்து

makkalOct 3, 2018 - 09:04:30 PM | Posted IP 162.1*****

what Rahul says is true

saamySep 27, 2018 - 07:01:27 AM | Posted IP 103.2*****

உன்னுடைய குடும்பம் திருட்டு குடும்பம் - கட்சி கொள்ளைக்கார கட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals




Thoothukudi Business Directory